Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் தீ விபத்து: ஐவர் படுகாயம்

In
Updated: 07:56 GMT, Jun 12, 2018 | Published: 07:56 GMT, Jun 12, 2018 |
0 Comments
1169
This post was written by : sujithra

வேல்ஸிலுள்ள லான்பிரடாச் (Llanbradach) பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டில் தீ பரவியுள்ளது.

இதனால் வீட்டில் வசித்து வந்த 5 பேர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு வேல்ஸ தீயணைப்பு படையைச் சேர்ந்த 25 தீயணைப்பு வீரர்கள் குறித்த வீட்டில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

இதேவேளை தீ விபத்தில் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பிலும் இந்த தீ விபத்து இடம்பெற்றமைக்கான உண்மையான காரணம் தொடர்பில் அறிவதற்காகவும் பொலிஸார் மற்றும் தெற்கு தீயணைப்புப் பிரிவும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீட்டில் எவ்வாறு தீ பரவியது என்பது தொடர்பில் தெரியாது எனவும் வெடிப்புச் சத்தம் கேட்டதனை அடுத்தே தாம் சென்று பார்த்ததாகவும் அயலவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg