Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அநாகரிகமான முறையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன்: விஜயதரணி

In இந்தியா
Updated: 10:50 GMT, Jun 12, 2018 | Published: 10:15 GMT, Jun 12, 2018 |
0 Comments
1119
This post was written by : Elakkiya

அநாகரிகமான முறையில் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய சட்டமன்றத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பேசுவதற்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் சபாநாயகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஜயதரணி சபாநாயகரின் உத்தரவின் பிரகாரம், பெண் காவலர்களால் சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்துரைத்த விஜயதரணி, “சட்டமன்றத்தில் கன்னியாகுமரி பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டேன். சபாநாயகர் மறுப்பு தெரிவிக்க தொடர்ந்தும் நான் அழுத்தம் கொடுத்தேன். அதனால் சபைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சபைக் காவலர்கள் அநாகரிகமான முறையில் காயப்படுத்தி வெளியேற்றியதாகவும் சபாநாயகரும் அநாகரிகமாக பேசியதாகவும் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி குறிப்பிட்டுள்ளார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)