Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயநகர் தொகுதியை கைப்பற்றப்போவது யார்?

In இந்தியா
Updated: 04:13 GMT, Jun 13, 2018 | Published: 04:13 GMT, Jun 13, 2018 |
0 Comments
1079
This post was written by : sujithra

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் கடந்த மாதம் 12 ஆம் திகதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பெங்களூர் ஜெயநகர் தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.

அந்த தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த விஜயகுமார், கடந்த மாதம் 4ஆம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்ததால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ஜெயநகர் தொகுதியில் கடந்த 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் 1,11,689 வாக்காளர்கள வாக்களித்தனர்.

இந்த தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் மகளான சவுமியா ரெட்டியும், பாரதிய ஜனதா சார்பில் மறைந்த விஜயகுமார் அவர்களின் சகோதரர் பிரகலாத் பாபுவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இதேவேளை காங்கிரஸ் கட்சிக்கு மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆதரவு அளித்துள்ளதால், காங்கிரஸிற்கும் பாரதிய ஜனதாவுக்கு இடையே நேரடிப் போட்டி இருந்தது.

வாக்குப்பதிவு முடிவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, எஸ.;எஸ்.எம.;ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி, பா.ஜ.க. வேட்பாளர் பிரகலாத்தை விட 427 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையி பெற்றிரந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)