Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்

In இந்தியா
Updated: 07:25 GMT, Jun 13, 2018 | Published: 07:18 GMT, Jun 13, 2018 |
0 Comments
1091
This post was written by : sujithra

மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருப்பதாக கடல்சார் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, வங்கக் கடலில் விசைப் படகுகளில் மீன்பிடித்தால் மீன்குஞ்சுகள் வலையில் சிக்கி அழியும் என்பதால், கடந்த 2000ஆம் ஆண்டு முதலாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 45 நாட்கள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வந்தது.

இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இத்தடைக்காலம் 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் திகதி ஆரம்பித்தது.

மீன்பிடி தடைக்காலத்தில், திருவள்ளூர் மாவட்டம் தொடங்கி, கன்னியாகுமரி வரையுள்ள கடற்பகுதிகளில், விசைப் படகு மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடைக்காலம் நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவுடன் முடிவடைகின்ற நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 10000 மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. சென்னை காசிமேட்டில் மட்டும் 1,200 விசைப் படகுகள் உள்ளன டின்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)