Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கௌரி லங்கேஷ் கொலை: மற்றுமொரு சந்தேகநபர் கைது

In இந்தியா
Updated: 07:40 GMT, Jun 13, 2018 | Published: 07:40 GMT, Jun 13, 2018 |
0 Comments
1039
This post was written by : sujithra

மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்ற இளைஞரை பொலிஸார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்துள்ளனர்.

பெங்களூரைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், இந்துத்துவ அரசியல் எதிர்ப்பாளருமான கௌரி லங்கேஷ் கடந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப்படை அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்த நவீன் குமாரை குற்றப்புலனாய்வு பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்திய போது அவர் வழங்கிய தகவல்களையடுத்த பொலிஸார் கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்தகியைச் சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவரை நேற்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் நேற்று பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் அப்போது பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய, பரசுராம் வாக்மோரை 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க பொலிஸாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இந்துத்துவா அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு ஸ்ரீராம சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)