Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எஸ்.வி.சேகரை கைதுசெய்யாமல் அரசு வேடிக்கைப் பார்க்கிறது – ஸ்டாலின்

In இந்தியா
Updated: 08:17 GMT, Jun 13, 2018 | Published: 08:17 GMT, Jun 13, 2018 |
0 Comments
1040
This post was written by : sujithra

இன்றைய சட்டசபை கூட்டத்தில் எஸ்.வி.சேகர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்தமையால் தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது.

பா.ஜ.கவைச் சேர்ந்த எஸ்.விசேகர், பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தெரிவித்த விமர்சனம் கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் இன்று எஸ்.வி.சேகர். பிரச்சினையை எழுப்பினார். எஸ்.வி.சேகரை கைது செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அதற்கு சபாநாயகர் தனபால், எஸ்.வி.சேகர் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டுள்ளது. எனவே அது குறித்து இங்கு பேச முடியாது என்று கூறியுள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தொடர்ச்சியாக பேச முயற்சி செய்த போதும், சபாநாயகர் தனபால் அனுமதி அளிக்கவில்லை.

எனவே சபாநாயகரின் இந்த செயற்பாட்டை கண்டித்து தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

எஸ்.வி. சேகர் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவான விமர்சனங்களை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவரை கைது செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டப் போதிலும் அவரை கைதுசெய்யாமல் அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் டிதனை குிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)