Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி விடுத்த சவாலை நிறைவேற்றிய மோடி

In இந்தியா
Updated: 09:32 GMT, Jun 13, 2018 | Published: 09:32 GMT, Jun 13, 2018 |
0 Comments
1065
This post was written by : sujithra

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லியின் சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தான் உடற்பயிற்சி செய்வதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை கடந்த மாதம் வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து “நாம் ஃபிட்டாக இருந்தால் தான் நாடு ஃபிட்டாக இருக்கும்” அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விராட் கோஹ்லி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டெக் (Tag) செய்திருந்தார்.

இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோஹ்லி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டெக், செய்திருந்தார் இந்த சவாலை ஏற்ற பிரதமர் மோடி, தனது உடற்பயிற்சி வீடியோவை விரைவில் வெளியிடுவேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் வீடியோவை பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளார்.

காலை நேர உடற்பயிற்சி மற்றும் யோகா மட்டுமின்றி பஞ்சபூத தத்துவத்தை விளக்கும் நடைபாதையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பயிற்சிகள் தனக்கு புத்துணர்ச்சி தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் பொதுநலவாய போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற மணிகா பத்ரா ஆகியோருக்கு பிட்னஸ் சவால் விடுத்துள்ளதுடன் துணிச்சலான ஐ.பி.எஸ். அதிகாரிகள், குறிப்பாக 40 வயதுக்குமேல் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும் மோடி பிட்னஸ் சவால் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)