Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸின் சௌமியா ரெட்டி வெற்றி

In இந்தியா
Updated: 10:23 GMT, Jun 13, 2018 | Published: 10:23 GMT, Jun 13, 2018 |
0 Comments
1069
This post was written by : sujithra

கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரஸின் பலம் 79 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மே 12ஆம் திகதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதையடுத்து கடந்த 11 ஆம் திகதி அங்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சௌமியாவும், பாரதிய ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி பெங்களூர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்டது.

மொத்தம் 14 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்பட்டன இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சௌமியாரெட்டி முன்னணியில் இருந்தார்.

9 சுற்றுக்கள் வரை எண்ணப்பட்டபோது 15,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தது. ஆனால் அடுத்த 5 சுற்றுக்களில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் வாக்குகள் எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை 2 முறைகள் வெற்றியை தக்க வைத்த தொகுதியை, பாரதிய ஜனதா கட்சி தற்போது இழந்துவிட்டதென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)