Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மக்களின் மனதை நல்லாட்சி அரசாங்கம் புண்படுத்திவிட்டது: துஷியந்தன்

In இலங்கை
Updated: 11:11 GMT, Jun 13, 2018 | Published: 11:11 GMT, Jun 13, 2018 |
0 Comments
1031
This post was written by : Ravivarman

சகோதர இனத்தைச் சேர்ந்த ஒருவரை இந்து மத விவகார பிரதியமைச்சராக நியமித்து ஒட்டுமொத்த இந்து மக்களின் மனதையும் நல்லாட்சி அரசாங்கம் புண்படுத்திவிட்டது என இந்து சமயச் சொற்பொழிவாளரான செ.துஷியந்தன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு இந்து சமய விவகார பிரதியமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை குறித்து பலரும் எதிர்ப்புக்களை வெளியிட்டுவரும் நிலையில், இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இன்று (புதன்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சகோதர மதத்தினைச் சேர்ந்த ஒருவரை இந்துமத விவகார பிரதியமைச்சராக நியமித்துள்ளமையை இந்துக்கள் அனைவரும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் மக்கள் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது என்பதுடன், அம் மக்களின் பிரதிநிதிகள் பலர் நாடாளுமன்றத்தில் இருக்கும் நிலையில் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்து சமயத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பற்றிய அடிப்படைக் கருத்தினைக்கூட அறிந்திராத மாற்று மத சகோதரரை இந்து மத பிரதியமைச்சராக நியமித்து இந்த அரசாங்கம் இந்துக்கள் முகத்தில் கரியைப் பூசிவிட்டது.

இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கும் இடையிலும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக அமைக்கப்பட்ட நல்லாட்சி இன்று மதங்களுக்கு இடையில் விரிசலையும், முரண்பாட்டையும் தோற்றுவிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது.

எனவே இவ்விடயத்தினைக் கருத்தில் எடுத்து உடனடியாக இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகின்றேன்” என அக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)