Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்து சம்மேளனம் – ஜனாதிபதி இணைப்புச் செயலாளருக்குமிடையே அவசர சந்திப்பு

In இலங்கை
Updated: 12:14 GMT, Jun 13, 2018 | Published: 12:14 GMT, Jun 13, 2018 |
0 Comments
1387
This post was written by : Jeyachandran Vithushan

ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இந்து சம்மேளனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குமிடையிலான அவசர சந்திப்பொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பிற்கு சம்மேளனத்தின் தலைவர் அருண்காந்த் தலைமை தாங்கினார்.

இந்த சந்திப்பின் போது, யாழில் நடைபெற்றுவரும் வாள்வெட்டுக்கள், இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவிவரும் போதைப்பொருள் பாவனை, தமிழ் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது மற்றும் விதவைகள் மற்றும் முன்னால் போராளிகளின் மறுவாழ்வு திட்டங்களின் தோல்விகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் பின்னர் குறித்த பிரச்சினைகள் தொடர்பில் கோவை ஒன்றினை தயாரித்து, அடுத்த சந்திப்பின் போது கொண்டுவருமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார் என ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் எஸ்.டி.அபேகுணசேகர தெரிவித்துள்ளதாக சம்மேளனத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை எதிர்வரும் கிழமைகளில் இந்து சம்மேளனத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருக்கும் நிலையிலேயே இவ் அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)