Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் முழுமையான மனித எலும்புக்கூடு மீட்பு: பிரதேசத்தில் பதற்றம்!

In இலங்கை
Updated: 12:17 GMT, Jun 13, 2018 | Published: 12:17 GMT, Jun 13, 2018 |
0 Comments
1088
This post was written by : Ravivarman

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகளின்போது முழுமையான மனித எலும்புக்கூடு மீட்கப்பட்டதில் குறித்த பிரதேசத்தில் பதற்றநிலை ஏற்பட்டது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 12 ஆவது நாளாகவும் இடம்பெற்ற நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணியளவில் குறித்த எலும்புக்கூடு மீட்கப்பட்டது.

இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் கூடி நின்ற மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

குறித்த அகழ்வுப் பணியில் களனிப் பல்கலைக்கழக ‘தொல்பொருள்’ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகள் மற்றும் பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் இணைந்து விசேட சட்டவைத்திய நிபுணர் டபல்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினரும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினருடன் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்றும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் 13 ஆவது நாளாகவும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)