Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடக்கில் 10000 மில்லியன் ரூபாய் செலவில் பாரிய சுகாதாரத் துறை ஒப்பந்தம் கைச்சாத்து

In இலங்கை
Updated: 12:32 GMT, Jun 13, 2018 | Published: 12:29 GMT, Jun 13, 2018 |
0 Comments
1038
This post was written by : Jeyachandran Vithushan

வடக்கில் 10 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் பாரிய சுகாதார துறை அபிவிருத்திக்கான சர்வதேச ஒப்பந்தம் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் முன்னாள் சுகாதார அமைச்சரின் முயற்சியினால் மத்திய சுகாதார அமைச்சின் அனுமதியுடன் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விசேட வைத்திய பிரிவுகளை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“எமது நீண்ட கால முயற்சி இன்று கைகூடியுள்ளது. வடக்கு மாகாணத்தின் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் மாகாணத்திற்கான நீண்டகால திட்டமொன்றை தயாரித்திருந்தோம்.

இதற்காக 17 உபகுழுக்களை அமைத்து துறைசார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் நீண்டகால சுகாதார மேம்பாட்டுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டது.

இவ்வாறான திட்டமொன்றை தயாரித்த ஒரேயொரு மாகாண சுகாதார அமைச்சு எமது மாகாணமாகும். இதன் தொடர்ச்சியாக 2016 ஆம் ஆண்டில் மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவர் ராஜித சேனாரத்னவின் அனுசரணையுடன் நெதர்லாந்து தூதுக்குழுவைச் சந்தித்து எமது நீண்ட கால திட்டத்தை கையளித்திருந்தேன்.

அதன்தொடர்ச்சியாக தூதுக்குழுவினர் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 2016ல் விஜயம் செய்து கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று கொழும்பில் நெதர்லாந்து தூதுக்குழுவுக்கும் மத்திய சுகாதார அமைச்சுமிடையே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நெதர்லாந்து நாட்டு தூதுக்குழுவை சந்தித்ததில் இருந்து இன்று வரை என்னுடன் இந்த கைங்கரியத்திற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள்.

60 மில்லியன் யூரோ நிதியில் (10,000 மில்லியன் ரூபா) வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சுகாதரசேவையை மேம்படுத்தும் நோக்கோடு கொண்டுவரப்பட்ட இத்திட்டம், எதிர்காலத்தில் உலகத்தர சுகாதாரசேவை எமது மக்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

இத்திட்டத்தை வடக்கு மாகாணத்திற்கு கொண்டு வருவதற்கு அனைத்து வகையிலும் அனுசரணை வழங்கிய மத்திய சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எமது மக்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)