Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை

In இலங்கை
Updated: 13:29 GMT, Jun 13, 2018 | Published: 13:29 GMT, Jun 13, 2018 |
0 Comments
1047
This post was written by : Jeyachandran Vithushan

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனை யாழ்.நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூல் சார்பில் பொலிஸில் வழங்கப்பட்ட முறைப்பட்டிருக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த விசாரணையானது நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது எதிராளியான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மன்றில் முன்னிலையாகவில்லை. அவருக்கு உரிய அழைப்பாணை வழங்கப்படவில்லை என மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், ஒரு சுயாதீன ஆணைக்குழுவின் உறுப்பினரான எனது முறைப்பாட்டுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கே பொலிஸார் பின் நிற்பதாக இரட்ணஜீவன் கூல் பொலிஸார் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

என் மீதான அவதூறு தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் உரிய விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அதனை ஆராய்ந்த நீதிவான், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தார். இதற்கு எழுத்துமூல சமர்ப்பணத்தை மன்றில் முன்வைப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்தார். அதனை தனிப்பட்ட சமர்ப்பணமாக முன்வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், வாக்குமூலம் ஒன்றை பொலிஸாருக்கு வழங்குமாறு பணித்தது.

மேலும் இந்த வழக்கு விசாரணையை ஓகஸ்ட் 8 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், சட்டத்தரணி வி.மணிவண்ணனை மன்றில் முன்னிலையாக வேண்டும் என அழைப்பாணை விடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)