Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து சேவைகள் நிறுத்தம்!

In இலங்கை
Updated: 14:10 GMT, Jun 13, 2018 | Published: 14:10 GMT, Jun 13, 2018 |
0 Comments
1044
This post was written by : Ravivarman

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர்கள்  பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அம்மாவட்டத் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

குறித்த பணிப்புறக்கணிப்புத் தொடர்பாக முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் நாளை முதல் தமக்கு உரிய தீர்வுகள் கிடைக்கும் வரை கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றை முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக முன்னெடுக்கவுள்ளதோடு பணிப்புறக்கணிப்பிலும் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எமது பேரூந்து உரிமையாளர்களின் ஒருமித்த வேண்டுகோளுக்கமைய எமது அடிப்படை பிரச்சனைகளை சீர் செய்வது தொடர்பாக வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கும் வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் பல தடவைகள் நேரடியாகவும் தெரியப்படுத்தியிருந்தோம்.

எதுவிதமான ஆக்கபூர்வமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாரசபையால் பேரூந்துக்கான நிரந்தர வழி அனுமதிப்பத்திரமே குறிக்கோளாய் இருக்கிறது.  இது முல்லைத்தீவு தனியார் பேரூந்து சங்க உரிமையாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே எமது அடுத்த கட்ட நகர்வாக எமது சகல பேரூந்து பணிகளையும் நிறுத்தி எங்களின் எதிர்ப்பினை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம்.

ஆகவே எமது கோரிக்கைகளுக்கு உறுதியான தீர்வு கிடைக்கும் வரை நாளை முதல் முல்லைத்தீவு மாவட்டத்துக்குரிய அனைத்து தனியார் பேரூந்துக்களும் சேவையில் ஈடுபடாது என தெரிவித்துக் கொள்கின்றோம்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)