Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்துக்களை கொச்சைப்படுத்தும் நல்லாட்சி!

In இலங்கை
Updated: 13:49 GMT, Jun 13, 2018 | Published: 13:49 GMT, Jun 13, 2018 |
0 Comments
1069
This post was written by : Jeyachandran Vithushan

இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லீம் மதத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டமையானது இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடு என வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் தெரிவித்துள்ளார்.

பிரதி அமைச்சர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்து கலாச்சார அலுவல்கள் அமைச்சின் பிரதியமைச்சராக ஒர் முஸ்லீம் மதத்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். இச் செயற்பாடானது இந்து மதத்தவரது புனிதத் தன்மையை கொச்சைப்படுத்தும் செயற்பாடாகும்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறிக்கொள்ளுகின்ற இவ் அரசாங்கம் உண்மையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய விடயங்களை மறந்து அல்லது அதில் இன்னமும் நல்லிணகத்தை ஏற்படுத்தாது தேவையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் ஜனாதிபதி இவ் பிரதியமைச்சு விவகாரத்தை மீள் பரிசிலனை செய்து இந்துமதத்தவர் ஒருவரை நிமயிக்க வேண்டும்” என அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)