Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாநிலத்தின் ஆரோக்கியமே முக்கியம்: மோடிக்கு வித்தியாசமாக பதிலளித்த குமாரசாமி

In இந்தியா
Updated: 17:23 GMT, Jun 13, 2018 | Published: 16:49 GMT, Jun 13, 2018 |
0 Comments
1055
This post was written by : Jeyachandran Vithushan

தனது ஆரோக்கியத்தை விட என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்த ஆரோக்கியமே முக்கியம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு பதில் வழங்கியுள்ளார்.

மக்கள் மத்தியில் உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், பிரபலங்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிடுமாறு மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் சிங் அறிவுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கடந்த மாதத்தில் வெளியிட்ட இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டார். அதில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை டேக் செய்து அவரை சவாலுக்கு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து பிரதமருக்கு பதிலளித்துள்ள குமாரசாமி, “என்னுடைய உடல்நலத்தைக் காட்டிலும், என்னுடைய மாநிலத்தின் வளர்ச்சி குறித்த பிட்னஸில்தான் அதிகமான அக்கறை செலுத்தி வருகிறேன். அதற்கு உங்களுடைய ஆதரவும் தேவை” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)