Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூத்துக்குடி விவகாரம்: மனித உரிமை ஆணையகத்தில் கனிமொழி முறைப்பாடு

In இந்தியா
Updated: 03:39 GMT, Jun 14, 2018 | Published: 03:39 GMT, Jun 14, 2018 |
0 Comments
1071
This post was written by : Kemasiya

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பில், தமிழகத்தை சேர்ந்த இரு அதிகாரிகளிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் டி.ஜி.பி உளவுத்துறை அதிகாரி ஐ.ஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென, நேற்று (புதன்கிழமை) மனித உரிமை ஆணையத்திடம் கனிமொழி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கி பிரயோகம் தமிழக உளவுத்துறைக்கு பெரும் தோல்வி என்றும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பொதுமக்கள் 100 ஆவது நாளாக போராடிய போது முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கி சூட்டில் கவலைக்கிடமாக 13 பேர் உயிரிழந்தனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இது தொடர்பில் மேற்குறித்த அதிகாரிகள் தகவலை சேகரிக்காதமையாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதமையினாலும், அவர்கள் மீது விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும் பொலிசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றதால், பொலிஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று உயர் நீதிமன்றில் டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு பொலிஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு பொலிசாரும் கொடூர காயம் அடையவில்லை.

பொலிசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)