Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிலக்கரி மோசடி விவகாரத்துக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம்: சம்பிக்க ரணவக்க

In இலங்கை
Updated: 03:43 GMT, Jun 14, 2018 | Published: 03:43 GMT, Jun 14, 2018 |
0 Comments
1059
This post was written by : Yuganthini

நிலக்கரி மோசடி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றிணை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, பாரிய நகரம் மற்றும் மேற்கத்திய அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“2009 முதல் 2016 ஆம் காலப்பகுதியில் நிலக்கரி கொள்வனவில் மோசடி இடம்பெற்றுள்ளது. இந்த மோசடி மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரத்தினை காட்டிலும் மிகவும் பாரிய அளவிளான மோசடியாகும். இதில் பலர் பயனடைந்துள்ளனர்.

இந்தச் செயற்பாட்டின் காரணமாக மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டது. இதனால் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும் ஊழல் இடம்பெற்றமைக்கான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் என்னிடம் உள்ளது. அதனை ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னே தன்னால் வெளிப்படுத்த முடியும்.

மேலும் 2009 முதல் 2016 ஆம் ஆண்டு வரை ஒரே நிறுவனத்துக்கு நிலக்கரி டெண்டர் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்” எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)