Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மூன்று மாத போராட்டம் தோல்வி: ரயில்வே சட்டமூலம் நிறைவேற்றம்!

In ஐரோப்பா
Updated: 03:49 GMT, Jun 14, 2018 | Published: 03:49 GMT, Jun 14, 2018 |
0 Comments
1052
This post was written by : Varshini

பிரான்ஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான SNCF நிறுவனத்தை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் சட்டமூலம், பிரான்ஸ் தேசிய சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தொழிற்சங்கங்களை முறியடித்து பொருளாதாரத்தை மறுசீரமைக்கும் வகையில் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனால் கொண்டுவரப்பட்ட குறித்த சட்டமூலத்தின் மீதான வாக்கெடுப்பு, நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. அரச சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் சமூகமளிக்காத போதும் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், இன்று இச்சட்டமூலம் செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு இடம்பெறும். அதன் பின்னர் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு, விரைவில் சட்டமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அரச நிர்வாகத்தின் கீழ் காணப்படும் SNCF நிறுவனத்தை நவீனமயமாக்கி இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைக்கும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டு, உள்நாட்டு பயணிகள் ஏகபோக உரிமையை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த மூன்று மாத காலமாக ரயில்வே தொழிற்சங்கங்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அவற்றையும் மீறி இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், ரயில் சேவையின் தரத்தை மேம்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்கும் வகையிலும், எதிர்கால நன்மை கருதியுமே இச்சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ELISABETH BORNE தெரிவித்துள்ளார்.

1930ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசியமயமாக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகமுக்கிய சீர்திருத்த சட்டமூலமாக இச்சட்டமூலம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)