Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தூக்கில் தொங்கிய நிலையில் பல்கலைக்கழக மாணவி சடலமாக கண்டெடுப்பு

In இலங்கை
Updated: 04:10 GMT, Jun 14, 2018 | Published: 04:10 GMT, Jun 14, 2018 |
0 Comments
1149
This post was written by : Yuganthini

மட்டக்களப்பு, நாவற்குடா பகுதியிலுள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிததுள்ளனர்.

நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் வெல்லாவெளி காக்காச்சிவட்டை பகுதியைச் சேர்ந்த சங்கரத்துரை பானுஜா (22 வயது) என்ற மாணவியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நாவற்குடா கிழக்கு, விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள வீட்டில் வாடகைக்கு இருந்த கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்லடி விபுலானந்தா இசை, நடன கல்லூரியில் கட்புலன் திறன் நுட்ப துறையில் இரண்டாம் வருடத்தில் கல்வி பயின்று வந்த மாணவியே உயிரிழந்துள்ளார்.

மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பொலிஸ் குழுவினர் மற்றும் காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)