Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரான்ஃபெல் தீ விபத்து நினைவுதினம்: பச்சையாக ஒளிரும் லண்டன்

In
Updated: 04:43 GMT, Jun 14, 2018 | Published: 04:43 GMT, Jun 14, 2018 |
0 Comments
1070
This post was written by : Varshini

லண்டன் கிரான்ஃபெல் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாவதை நினைவுகூரும் வகையில், கிரான்ஃபெல் கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கட்டடங்கள் பச்சை நிறத்தில் ஒளியூட்டப்படவுள்ளன.

71 உயிர்களை காவுகொண்ட இத்தீவிபத்து ஏற்பட்டு இன்றுடன் (வியாழக்கிழமை) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. இந்நிலையில், பல நினைவு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக கிரான்ஃபெல் கட்டடத்தின் மேற்பகுதி வெள்ளை நிறத்தில் மூடப்பட்டு, அதில் சோகத்தின் சின்னமாக பச்சை நிற இதயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ”Grenfell Forever In Our Hearts” என்ற வாசகமும் அதில் பொறிக்கப்பட்டுள்ளது.

கிரான்ஃபெல் உள்ளிட்ட பிரித்தானியாவின் பல முக்கிய கட்டடங்கள் இன்றிரவு முழுவதும் இவ்வாறு பச்சை நிறத்தில் ஒளியூட்டப்படவுள்ளதோடு, நண்பகல் 12 மணிக்கு நாடு முழுவதும ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இலக்கம் 10, டவுனிங் ஸ்ட்ரீட்டில் அமைந்துள்ள பிரதமர் தெரேசா மேயின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் இரவு முழுவதும் பச்சை நிறத்தில் ஒளிரவுள்ளமை சிறப்பம்சமாகும்.

அத்தோடு, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிரான்ஃபெல் கட்டத்தின் அருகில் ஒன்றுகூடி பிரார்த்தனையிலும் ஈடுபடவுள்ளனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் திகதி நள்ளிரவு கிரான்பெஃல் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்தனர். பெறுமதிமிக்க சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தாக இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

21ஆம் நூற்றாண்டில் அதுவும் லண்டனில் இவ்வாறு ஒரு தீ விபத்து ஏற்பட்டமை பலரது விமர்சனங்களுக்கு உள்ளானதோடு, குடியிருப்பின் பாதுகாப்பு கேள்விக்குட்படுத்தப்பட்டது. பிரதமர் மேயின் உத்தரவின் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், குடியிருப்பின் வெளிப்பகுதியில் காணப்பட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய உலோகம் வகையிலான பூச்சே தீப்பரவலுக்கு காரணமாக அமைந்ததென தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அவ்வாறு காணப்படும் பூச்சை அகற்றும் நடவடிக்கைகள் பல கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)