Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் திட்டத்தை உறுதிபடுத்த ஒன்றிணையும் மேற்குலகமும் ஆசியாவும்

In
Updated: 05:53 GMT, Jun 14, 2018 | Published: 05:53 GMT, Jun 14, 2018 |
0 Comments
1070
This post was written by : Risha

வடகொரியா அதன் அணுவாயுத திட்டத்தை கைவிடுவதை உறுதிபடுத்துவதற்கு, ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உறுதியளித்துள்ளன.

குறித்த மூன்று நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இடையே தென்கொரியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற முத்தரப்பு சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் கங் கியாங் மற்றும் ஜப்பான் அமைச்சர் டாறோ கொனோ ஆகியோருக்கிடையில் சியோலில் இச்சந்திப்பு நடைபெற்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த சந்திப்பு நிறைவடைந்து இரு தினங்களில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.

அணுவாயுத பாவனையை முற்றாக கைவிடுவது தொடர்பான கிம்-இன் அறிவிப்பானது, வடகிழக்கு ஆசியாவிலும், முழு உலகத்திலும் நீடித்த சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான முக்கிய படியாகும் என அமெரிக்காவின் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த தென்கொரிய அமைச்சர், தென்கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டு இராணுவ பயிற்சியை நிறுத்துவதாக, வடகொரியாவிடம் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இது இராணுவ அதிகாரிகளால் முடிவு செய்யப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அணுசக்தி, ஏவுகணை மற்றும் கடத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜப்பானுக்கும் வடகொரியாவிற்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ள வேண்டும் என நம்புவதாக ஜப்பான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)