Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றத்திற்குள் சலசலப்பை ஏற்படுத்திய பிரெக்சிற் விவாதம்

In
Updated: 06:17 GMT, Jun 14, 2018 | Published: 06:12 GMT, Jun 14, 2018 |
0 Comments
1051
This post was written by : Risha

பிரெக்சிற் விவாதத்தில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பிரெக்சிற் குறித்த இரண்டாவது நாள் விவாதம் நேற்று (புதன்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்று வந்த நிலையிலேயே, ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவரை சபையிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து, தலைவரை பின்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் 30 பேரும் இவ்வாறு மன்றிலிருந்து வெளியேறியுள்ளனர்.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் அயன் பிளாக்ஃபர்ட், ஸ்கொட்லாந்து மற்றும் பிரெக்சிற் தொடர்பாக மீண்டும் புதிதாக விவாதம் நடத்தக் கோரி மன்றில் அமர மறுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரை மன்றிலிருந்து வெளியேற நாடாளுமன்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய, ஸ்கொட்லாந்து தேசிய கட்சியினர் வெளியேறி சென்றுள்ளனர்.

இதேவேளை, பிரதமர் தெரேசா மே அரசாங்கம் ஸ்கொட்லாந்தை புறக்கணித்து வருவதாகவும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)