Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீரில் தொடரும் மோதல்: மூவர் உயிரிழப்பு

In இந்தியா
Updated: 05:59 GMT, Jun 14, 2018 | Published: 05:59 GMT, Jun 14, 2018 |
0 Comments
1100
This post was written by : Varshini

ஜம்மு – காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் இந்திய இராணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்தோடு, இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பண்டிபாரா மாவட்டத்தின் ரெய்னார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து கடந்த ஆறு நாட்களாக அங்கு தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெறுகிறது. அத்தோடு, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ந்தும் தீவிர மோதல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையிலேயே இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதோடு, இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பா மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நேற்று நான்கு பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அங்கு தொடர்ந்தும் இரு தரப்பினருக்கும் இடையில் சண்டை இடம்பெற்று வருகின்றது.

யுத்த நிறுத்தம் நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)