Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதிக்கு சிறை!

In
Updated: 06:47 GMT, Jun 14, 2018 | Published: 06:47 GMT, Jun 14, 2018 |
0 Comments
1137
This post was written by : Risha

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல் கயூமிற்கு, மாலைதீவு நீதிமன்றமொன்றினால் 19 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கு தடையாக செயற்பாட்ட குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அதிகாரத்திலுள்ள பிரதம நீதியரசர் ஆகியோருக்கு சிறைத்தண்டனை வழங்கி நேற்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் விசாரணையொன்றின் போது தங்களது கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்க மறுத்த குற்றச்சாட்டிலேயே அவர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தம்மீதான குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் மாலைதீவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலான ஜனாதிபதி அப்துல்லா யமீனின் முயற்சியாக இச்சம்பவம் நோக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், குறித்த விமர்சனங்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இச்சிறைத்தண்டனையை மூர்க்கத்தனமானதும், அரசியல் உள்நோக்கம் கொண்டதும் என்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய துணைப் பணிப்பாளர் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், அநீதியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் செப்டர்ம்பர் மாதம் தங்களது வாக்குகளை உரிய முறையில் பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஈவா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)