Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுண்நிதி கடன் விவகாரம்: வவுனியாவில் கவனயீர்ப்பு பேரணி

In இலங்கை
Updated: 07:30 GMT, Jun 14, 2018 | Published: 07:30 GMT, Jun 14, 2018 |
0 Comments
1048
This post was written by : Yuganthini

நுண்நிதிக் கடன் செயற்பாட்டினால் அசௌகரியங்களை எதிர் நோக்கும் சமூகங்களை பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கும், இலங்கை மத்திய வங்கிக்கும் தொடர் அழுத்தத்தை கொடுக்கும் முகமாக கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு பேரணியை வவுனியா மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பெண்கள் சுய உதவிக்குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது வவுனியா பழைய பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தரிடம், ஆளுநர் மற்றும் அரசாங்க அதிபருக்குமான மகஜரொன்றினையும் கையளித்தனர்.

குறித்த பேரணியின் போது வட்டிக்கு வட்டி இரத்து செய்து வாழவிடுங்கள், ஏழைகளின் உணர்வை புரிந்து கொள், பெண்களிற்கு கடன் திட்டமா தற்கொலைக்கு திட்டமா, நாங்களும் மனிதர்களே மரியாதையுடன் அனுகுங்கள் நுண்நிதி கடன் சுமை குடும்பங்கள் சீரழிவு போன்ற பதாதைகளை ஏந்தி கோசங்களை எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)