Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரண்டே வாரங்களில் பதவி விலகிய ஸ்பெயின் அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 07:37 GMT, Jun 14, 2018 | Published: 07:37 GMT, Jun 14, 2018 |
0 Comments
1054
This post was written by : Risha

ஸ்பெயினின் கலாசார அமைச்சர் மாக்சிம் ஹுர்ட்டா, அமைச்சுப் பதவியை பொறுப்பேற்ற இரண்டே வாரங்களுக்குள் பதவி விலகியுள்ளார்.

வரி மோசடியில் ஈடுபட்டதாக உள்ளூர் ஊடகமொன்றில் வெளியான செய்தியை தொடர்ந்து, அவர் நேற்று (புதன்கிழமை) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியொன்றில் ஊடகவியலாளராக பணியாற்றிய போது, அவர் வரி விதிக்க தவறியிருந்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

2 இலட்சம் யூரோவிற்கும் அதிகமான வரித் தொகையை செலுத்த அவர் தவறியதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், 2006ஆம் ஆண்டு முதல் 2008 வரையிலான காலப்பகுதியில் விதிகள் மீறப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து தான், ஸ்பெயினின் வரி அதிகாரிகளுக்கு அபராதம் விதித்துள்ளதாக தெரிவித்த அவர், தற்போது தானொரு முக்கியமான தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாக்சிம் ஹுர்ட்டா, கடந்த மாதம் பிரதமர் Pedro Sánchez இனால் கலாசார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)