Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீபாவளியன்று திரைக்கு வருகிறது சூர்யாவின் என்.ஜி.கே.!

In சினிமா
Updated: 08:18 GMT, Jun 14, 2018 | Published: 08:18 GMT, Jun 14, 2018 |
0 Comments
1029
This post was written by : Vithushagan

சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் என்.ஜி.கே., இந்தாண்டு தீபாவளியன்று கண்டிப்பாக வெளியாகும் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘என்.ஜி.கே.’. இந்தப் படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் மற்றும் சாய் பல்லவி ஆகிய இரண்டு பேர் நடித்துள்ளனர். மேலும், படத்தில் ஜெகபதி பாபு, இளவரசு, ராம்குமார் கணேசன், பாலா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தை, ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் வாங்கி வெளியிடுகிறது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என முன்னரே அறிவிக்கப்பட்டது. அதை, தற்போது மீண்டும் நடிகர் சூர்யா உறுதி செய்துள்ளார். கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ இசை வெளியீட்டு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார். இந்தப் படத்தைத் அடுத்து நடிகர் சூர்யா, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)