Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மதத்தின் பெயரால் மனிதத்தை தொலைக்க வேண்டாம்’ – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

In இலங்கை
Updated: 10:17 GMT, Jun 14, 2018 | Published: 07:56 GMT, Jun 14, 2018 |
0 Comments
1210
This post was written by : Varshini

இந்து சமய விவகார பிரதியமைச்சர் பதவி முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த காதர் மஸ்தானுக்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) முற்பகல் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் வரை சென்று அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, ‘மதத்தின் பெயரால் மனிதத்தை தொலைக்காதே’, ‘இலங்கையில் இந்துக்களும் மனிதர்களே’, ‘நல்லாட்சியில் மத நல்லிணக்கம் எங்கே – மனித நேயம் எங்கே?’, ‘இந்துக்களின் உரிமையை இந்துக்களிடம் கொடு’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்ததோடு, இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவருக்கே இந்து சமய விவகார அமைச்சு வழங்கப்பட வேண்டுமென கோஷமெழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மேல் மாகாண சபை உறுப்பினர் சண்.குகவரதன், இந்து சமய அமைப்புக்களின் தலைவர்கள், இந்து சமய செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)