Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம்: நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு!

In இந்தியா
Updated: 09:49 GMT, Jun 14, 2018 | Published: 09:11 GMT, Jun 14, 2018 |
0 Comments
1057
This post was written by : Kemasiya

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றின் நீதிபதிகள் இரு வேறு முரணான தீர்ப்பை முன்வைத்துள்ள நிலையில், வழக்கின் தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, இன்று (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தலைமை நீதிபதி ஒரு தீர்ப்பினையும், நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பினையும் முன்வைத்தனர்.

தலைமை நீதிபதி இந்திரா பேனாட்சிங், சபாநாயகரின் தகுதி நீக்க தீர்ப்பு சட்டத்திற்கு உட்பட்டது. அது செல்லுபடியாகும் என்று கூறியுள்ளார். எனினும் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் தீர்ப்பு செல்லுபடியாகாது என்ற தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

இரு நீதிபதிகளைக் கொண்ட அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் தீர்ப்பின் முரண்பாட்டிற்கு இணங்க இந்த வழக்கு தற்போது, மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதியின் முடிவே இறுதி முடிவாக அமையவுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக, அ.தி.மு.க.வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுனரிடம் மனு கொடுத்தனர்.

இந்த விவகாரத்தில், சட்மன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகரினால் விளக்கம் கோரப்பட்ட நிலையில், ஜக்கையன் என்பவர் மட்டும் விளக்கமளிக்க ஏனையவர்கள், அதனை மறுதலித்தனர்.

இதனால் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான வெற்றிவேல் உள்பட 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, உயர்நீதிமன்றம் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.

பின்னர் அந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்விற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை பல நாட்கள் நடந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் கொறடா, டி.டி.வி.தினகரன் ஆதரவுசட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்காக உயர் நீதிமன்ற மூத்த சட்டத்தரணிகள் பலர், இந்த வழக்கில் ஆஜராகி வாதாடினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 23ஆம் திகதி  தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பு தற்போது மூன்றாவது நீதிபதியிடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)