Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்கொட்லாந்து அணிக்கெதிரான ரி-ருவென்ரி தொடரை பாகிஸ்தான் வென்றது!

In கிாிக்கட்
Updated: 08:20 GMT, Jun 14, 2018 | Published: 08:20 GMT, Jun 14, 2018 |
0 Comments
1031
This post was written by : Anojkiyan

ஸ்கொட்லாந்து அணியுடனான இரண்டு போட்டிகள் கொண்ட ரி-ருவென்ரி தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது.

ஏற்கனவே 12ஆம் திகதி எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ரி-ருவென்ரி போட்டியில், பாகிஸ்தான் அணி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதனால் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் இரண்டாவதும் இறுதியுமான ரி-ருவென்ரி போட்டி. இரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த பாகிஸ்தான் அணி, கடந்த போட்டியில் காட்டிய அதிரடியை காட்டிலும் சற்று பதற்றத்துடன் கூடிய நெருக்கடி நிலையிலேயே துடுப்பெடுத்தாடியது.

இதற்கமைய முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறிய குறையோடு ஆடுகளத்தை விட்டு பல முக்கிய வீரர்கள் வெளியேற, பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 166 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன்போது பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச ஓட்டமாக சொயிப் மலிக் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் மைக்கல் லீஸ்க் 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் சோல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைதொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி, இப்போட்டியில் ஆரம்ப இரு விக்கெட்டுகளை மோசமான முறையில் பாகிஸ்தானிடம் பறிகொடுத்தது.

ஆரம்பமே ஆட்டம் கண்ட ஸ்கொட்லாந்து அணி, அதிலிருந்து மீள முடியாமல் 82 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது கல்யும் மெக்லியோட் மட்டுமே அதிகட்ச ஒட்டமாக 26 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் பாஹீம் அஷ்ரஃப் 3 விக்கெட்டுகளையும், உஸ்மான் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்கொட்லாந்து அணியின் முக்கிய இரு விக்கெட்டுகளை தகர்த்தெறிந்த உஸ்மான் கான் தெரிவுசெய்யப்பட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)