Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: சாலிய பீரிஸ்

In இலங்கை
Updated: 08:23 GMT, Jun 14, 2018 | Published: 08:23 GMT, Jun 14, 2018 |
0 Comments
1074
This post was written by : Varshini

காணாமல் போனோர் பிரச்சினைக்கு முடிந்த வரையில் தீர்வினைக் காண முயற்சிப்பதாக, காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு நேற்று (புதன்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறித்தவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”காணாமல் போனோர் என நாம் மூவின சமூக மக்களையும் பார்க்கின்றோம். தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை சந்தித்து தரவுகளைப் பெறவுள்ளோம். இங்கு பல்வேறு காலகட்டத்திலும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பலர் காணாமல் போயுள்ளனர். அதுகுறித்து எங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

யுத்தக் காலத்தில் சிலர் காணாமல் போயுள்ளனர். ஜே.வி.பி கிளர்ச்சியிலும் பலர் காணாமல் போயுள்ளனர். யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளாலும் சிலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. அதுமாத்திரமன்றி இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது குறித்து நாம் விரிவாக ஆராய்ந்து விரைவில் காணாமல் போனோர் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண முயற்சிக்கிறோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)