Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்டுட்கார்ட் பகிரங்க டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேற்றம்!

In டெனிஸ்
Updated: 08:22 GMT, Jun 14, 2018 | Published: 08:22 GMT, Jun 14, 2018 |
0 Comments
1032
This post was written by : Anojkiyan

உலகின் மிகவும் பழமை வாய்ந்த டென்னிஸ் தொடராக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூலை 2ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நடைபெறுகின்றது.

இந்த தொடருக்கு முன்னோட்ட தொடராக ஜேர்மனியில் ஸ்டுட்கார்ட் பகிரங்க டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகின்றது. இதில் தற்போது பல முன்னணி வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

அந்த வகையில், இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சுவிஸ்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர், நீண்ட ஓய்விற்கு பிறகு இந்த தொடரில் களமிறங்கியுள்ளார்.

இதன்படி, அவர் நேற்று நடைபெற்ற மூன்றாவது சுற்று போட்டியில், ஜேர்மனியின் மிஸ்கா ஸ்வரேவ்வை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை யாரும் எதிர்பாராத விதமாக ரோஜர் பெடரர், 3-6 என இழந்தார்.
ஆனால், இரண்டாவது செட்டில் மீண்டெழுந்த பெடரர், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றிகொண்டு காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றதற்கு பிறகு, ஒரிரு தொடரில் விளையாடிய ரோஜர் பெடரர், அதன்பிறகு உபாதைக்கு உள்ளானார்.

இதனால், ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரை தவறவிட்ட அவர், தவரவரிசையிலும் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.

இந்நிலையில் தற்போது விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், நடப்பு சம்பியனாக வலம் வரும் ரோஜர் பெடரர், எட்டுமுறை முறையாக விம்பிள்டன் மகுடத்தை சூடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)