Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதல் போட்டியில் செனகல் அணியை எதிர்கொள்ள போலந்து தீவிர பயிற்சி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:26 GMT, Jun 14, 2018 | Published: 08:26 GMT, Jun 14, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan

உலக கால்பந்து அரங்கில் செல்லமாக கழுகுகள் ‘தி ஈகிள்ஸ்’ என்று அழைக்கப்படும் போலந்து அணி, தற்போது உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தயார் படுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.

தரம் வாய்ந்த வீரர்கள், அதி அற்புதமான ஒருங்கிணைக்கும் திறன், திறமையான பயிற்சியாளர், வீரர்கள் மீது உயிரையே வைத்திருக்கும் இரசிகர் கூட்டம் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களை கொண்டு இம்முறை உலக்கிண்ண தொடரில் எட்டாவது முறையாக களம் காணும் போலாந்து அணி, தற்போது சோச்சியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பயிற்சிகளின் நிறைவின் பின்னர், பயிற்சிகளை காண வந்த இரசிகர்கள், வீரர்களுடம் புகைப்படமெடுத்துக்கொண்டதோடு, வீரர்களின் நினைவுக்குறிப்பினையும் பெற்றுக்கொண்டனர்.

போலந்து அணியின் சிறந்த தடுப்பாளரான காமில் க்லிக், எதிர்வரும் ஐந்து வாரங்களுக்கு பிறகு மீண்டும் அணியில் இணைவார் என ஆடம் நவால்கா தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் பயிற்சியின் போது உபாதைக்குள்ளான காமில் க்லிக், உலகக்கிண்ண தொடரில் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்திருந்தது. ஆனால் இந்த சந்தேகத்துக்கு அணியின் பயிற்சியாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த முறை உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்றில் ஐரோப்பாவின் குழு ‘ஈ’ பிரிவில் போலந்து இடம்பெற்றிருந்தது. மொத்தம் 10 தகுதிச் சுற்று போட்டிகளில் 8 போட்டிகளில் அட்டகாசமான வெற்றியைப் போலந்து பதிவுசெய்திருந்தது.

பயிற்சி போட்டிகளின் போது போலாந்து அணி, 28 கோல்களில் 16 கோல்களை செலுத்தியவர் ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி என்பது குறிப்பிடத் தகுந்த விடயம்.

ருமேனியா, டென்மார்க் அணிக்கெதிரான போட்டிகளின் போது ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி, ஹெட்ரிக் கோல்களைச் செலுத்தினார். இதனால் உலகக்கிண்ண தொடரில் ஜொலிக்க சூடிய வீரர்களின் கணிப்பில் அவரும் இடம்பெற்றுள்ளார்.

மேலும், போலந்து அணியின் முதுகெலும்பாகவும், தலைமை வீரராகவும் இருக்கும் ரோபர்ட், இதுவரை போலந்து அணிக்காக 93 போட்டிகளில் விளையாடி 52 கோல்களை அடித்துள்ளார்.

கடந்த 1938ஆம், 1974ஆம், 1978ஆம், 1982ஆம், 1986ஆம், 2002ஆம், 2006ஆம் ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ண தொடரில் விளையாட தகுதி பெற்ற போலந்து அணி, தற்போது எட்டாவது முறையாக உலகக்கிண்ண தொடரில் அடியெடுத்து வைக்கின்றது.

கடந்த 1974ஆம், 1982ஆம் ஆண்டுகளில் 3ஆவது இடத்தைப் பிடித்ததே போலந்து அணியின் உலகக் கிண்ண தொடரில் அதிகபட்ச வெற்றியாகும்.
இந்த முறை உலகக் கிண்ண தொடரில் குழு ‘எச்’ பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகளுடன் இணைந்துள்ளது போலந்து.

16 வருடங்களுக்கு பிறகு உலகக் கிண்ண தொடரில்விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள செனகல் அணியை, எதிர்வரும் 19ஆம் திகதி, தனது முதல் போட்டியில் போலாந்து அணி எதிர்கொள்கின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)