Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலகக்கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு இந்தியாவில் மணற் சிற்பம்!

In உதைப்பந்தாட்டம்
Updated: 08:29 GMT, Jun 14, 2018 | Published: 08:29 GMT, Jun 14, 2018 |
0 Comments
1048
This post was written by : Anojkiyan

ரஷ்யாவில் ஆரம்பமாகியுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடரை முன்னிட்டு, இரசிகர்கள் கால்பந்து விளையாட்டை கௌரவிக்கும் வகையில் அதற்காக பல அர்ப்பணிப்புகளை செய்வது உலக வழக்கம்.

அந்த வகையில் கால்பந்து விளையாட்டை நேசிக்கும் இந்திய இரசிகர் ஒருவர், அனைவரும் வியக்கும் வகையில் மணற் சிற்பமொன்றை உருவாக்கியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பூரி நகரில் அமைந்துள்ள கடற்கரையொன்றிலேயே இந்த அற்புதமான கடற்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற இந்திய மணல் கலைஞர், சுதர்சன் பட்நாயக், என்பவரே இந்த மணற் சிற்பத்தை செதுக்கியுள்ளார்.

வழமையான மணற் சிற்பங்கள் போலல்லாது நிறப்பூச்சு பூசி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம், கண்களை கொள்ளை கொள்ளும் அளவுக்கு நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது.

கால்பந்துடன் கூடிய சம்பியன் உலகக்கிண்ணம், வடிவில் செதுக்கப்பட்டுள்ள இந்த மணற்சிற்பத்தில் பிஃபா உலகக்கிண்ணம் ரஷ்யா 2018 என எழுத்திலும் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அமைதி மற்றும் நட்புக்கான பந்து’ என்ற விஷேட வசனமும் குறித்த மணற் சிற்பத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

இன்று ஆரம்பமாகியுள்ள உலகக்கிண்ண கால்பந்து திருவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள இந்த மணற் சிற்பத்துக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்தோடு, இதனை காண வரும் இரசிகர்கள் இச் சிற்பத்தை புகைப்படுமெடுத்துச் செல்கின்றனர்.

இதேபோல நுண்ணிய சிற்ப கலைஞரான எல்.ஈ. ஸ்வார் ராவ், பாடசாலை உபகரணங்களான வண்ணக்கட்டி மற்றும் பென்சில் கரியத்தில் மிகச் சிறிய உலகக்கிண்ணத்தை வடிவமைத்துள்ளார்.

மிகச் சிறிய வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த உலகக்கிண்ணம், அசல் நிஜ உலகக்கிண்ணத்தை ஒத்ததாக காணப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)