Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்ச்சையை ஏற்படுத்தும் நுண்கடன்: ஜனாதிபதிக்கு மகஜர்

In இலங்கை
Updated: 09:04 GMT, Jun 14, 2018 | Published: 09:04 GMT, Jun 14, 2018 |
0 Comments
1205
This post was written by : Yuganthini

நுண்கடன் திட்டத்திற்கு மாற்றுத் திட்டம் வழங்குமாறு கோரி கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, கரடிபோக்கு சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேரணி கிளிநொச்சி மாவட்ட செயலகம் வரை சென்று, அங்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நுண்கடன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாற்று திட்டங்களை வங்கிகள் ஊடாக மக்களிற்கு வழங்க கோரியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த கவனயீர்ப்பு பேரணியின் முடிவில் மாவட்ட செயலகம் ஊடாக மத்திய வங்கி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோருக்கு மகஜரும் கையளிக்கப்பட்டது.

நுண் கடன் திட்டத்தால் வடக்கு கிழக்கில் குறைந்த வருமானம் பெறும் மக்கள் பாதிக்கப்படுவதோடு, கடனை திருப்பிச் செலுத்த முடியாத சந்தர்ப்பங்களில் தற்கொலை செய்துகொண்ட சந்தர்ப்பங்களும் கடந்த காலத்தில் பதிவாகியுள்ளன. இந்நிலையில், இக்கடன் திட்டத்தை இல்லாமல் செய்து மாற்று வழியை ஏற்படுத்த வேண்டுமென வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)