Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தீர்ப்பின் மூலம் நல்லதே நடக்கும்: அமைச்சர்கள் கருத்து

In இந்தியா
Updated: 11:05 GMT, Jun 14, 2018 | Published: 11:05 GMT, Jun 14, 2018 |
0 Comments
1074
This post was written by : Kemasiya

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் இதுவரை தீர்ப்பு முன்வைக்கப்படாத நிலையில், தீர்ப்பின் மூலம் நல்லதே நடக்குமென மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று (வியாழக்கிழமை), ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் மேற்படி கூறியுள்ளார்.

18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு, இன்று வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சென்னை உயர் நீதிமன்றில், இரு நீதிபதிகளின் கீழ் இடம்பெற்று வந்த இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் வெவ்வேறு தீர்ப்புக்களை முன்வைத்தனர்.

இந்நிலையில் தீர்ப்பு மூன்றாவது நீதிபதியிடம் மாற்றப்பட்டுள்ளது. எனவே இவ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார் மேற்படி கூறியுள்ளார்.

இதேவேளை தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த துணை சபாநாயகர் பொல்லாச்சி ஜெயராமன், அ.தி.மு.க.விற்கு சாதகமாகவே தீர்ப்பு அமையப்பெறும் எனக் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரை கொடுத்து உருவாக்கிய அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்றும், அது தான் தொண்டர்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பு என்றும்,  துணை சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)