Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சினிமா என்பது என்னுடைய உயிர்: ஜி.வி.பிரகாஷ்

In சினிமா
Updated: 09:43 GMT, Jun 14, 2018 | Published: 09:43 GMT, Jun 14, 2018 |
0 Comments
1026
This post was written by : Vithushagan

சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்று 3 வயதில் பாடல் மூலம் சினிமாவில் நுழைந்த ஜி.வி.பிரகாஷ் இன்று 31 வயது முடிந்து 32வது வயதில் அடி எடுத்து வைக்கிறார். 12 ஆண்டுகள் இசைப் பயணத்தில் 50க்கு மேற்பட்ட படங்கள், நடிகராகவும் 10 படங்களை கையில் வைத்துக் கொண்டு தமிழ் சினிமாவின் பரபரப்பான நாயகனாக வலம் வருகிறார்.

அன்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ”என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம்தான் மூன்று வயதில் மாமா என்னை பாட வைத்தது நினைவிலேயே இல்லை. சினிமாவை என்னுடைய உயிராக நினைத்து வேலை செய்கிறேன்.

18 வயதில் முதல் படம். உடன் வேலை பார்த்தவர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதனால் சின்ன வயதிலேயே நல்ல அனுபவங்கள் நான் நடிக்கும் படங்கள் ஜாலியாக இருந்தாலும் நான் நடிப்பை அப்படி விளையாட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

அறிமுகமாகும் போதே ஆடுகளம் நரேன் அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டுதான் வந்தேன்” என தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)