Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துஷ்பிரயோக விவகாரம்: யாழில் தனியார் கல்வி நிலையம் தீக்கிரை

In இலங்கை
Updated: 10:21 GMT, Jun 14, 2018 | Published: 09:53 GMT, Jun 14, 2018 |
0 Comments
1418
This post was written by : Yuganthini

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியிலுள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்று இனந்தெரியாதவர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இரவு, குறித்த கல்வி நிறுவனத்திற்குள் உட்புகுந்த குழு ஒன்று தளபாடங்கள் மற்றும் கொட்டகைகள் என்பவற்றுக்கு தீயிட்டுள்ளது.

இதேவேளை இந்த கல்வி நிறுவனத்தில் கற்பித்த ஆசிரியர் ஒருவர் பதிமூன்று வயதுக்கு மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த ஆசிரியர் கற்பித்த தனியார் கல்வி நிறுவனமே தற்போது தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)