Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

In இலங்கை
Updated: 10:23 GMT, Jun 14, 2018 | Published: 10:15 GMT, Jun 14, 2018 |
0 Comments
1043
This post was written by : Yuganthini

இந்து விவகார பிரதி அமைச்சராக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) ஈடுபட்டனர்.

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்துப் பீடங்களையும் சேர்ந்த தமிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குறிப்பிடுகையில்,

“இந்து சமய விவகார பிரதியமைச்சராக இஸ்லாமியர் நியமிக்கபட்டுள்ளமையானது தமிழ் – முஸ்லிம் இனங்களிடையே விரிசலை ஏற்படுத்தும்.

மேலும் இந்து சமய ஆகம நெறிகள் தொடர்பாக பிரதியமைச்சர் அறிந்திருக்க மாட்டார். எனவே இந்த விடயத்தில் ஜனாதிபதி உடனடியாக கவனம் செலுத்தி தமிழர் ஒருவரை பிரதியமைச்சராக நியமிக்க வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

இந்துக்கள் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ்வது பிடிக்கவில்லையா, இந்துக்களை ஒடுக்காதே இதன் பின்னணி என்ன?, இந்து சமயத்தின் உணர்வில் கை வைக்காதே, எதிர்க் கட்சித் தலைவர் எங்கே ஆழ்ந்த உறக்கத்திலா, நல்லாட்சி என்பது இவ்வாட்சிதானா, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களே சுயநலவாதிகளாகச் செயற்படாதீர்கள், இந்து அமைப்புக்களே ஒன்று திரள்வீர் விழித்தெழுவீர், மதங்களை வதைக்காதே, ஆதி மதத்திற்கே அவமானம், மைத்திரி அரசே சமயம் என்பது உணர்வு பூர்வமானது என்று தெரியாதா, மைத்திரி அரசே இதுதானா நீங்கள் கூறும் நல்லாட்சி அரசு போன்ற வாசகங்கள் எழுத்தபட்ட பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)