Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளித்திரையில் காலடியெடுத்து வைக்கும் அக்‌ஷரா ரெட்டி!

In சினிமா
Updated: 10:43 GMT, Jun 14, 2018 | Published: 10:43 GMT, Jun 14, 2018 |
0 Comments
1023
This post was written by : Vithushagan

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அக்‌ஷரா ரெட்டி, புதிய திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் கால்பதிக்கிறார்.

‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமான அக்‌‌ஷரா ஒரு தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் ஊகடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

”நம் உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாயில் நாம் வாழ வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம். என் அர்ப்பணிப்பை பார்த்து “மகாலட்சுமி” விருதை எனக்கு கொடுத்தார்கள். இந்த நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவம்.

மாடலிங் பெண்களும் கிராமத்திற்கு சென்று வாழ முடியும் என்கிற நம்பிக்கையை விதைத்த நிகழ்ச்சி. நான் பொதுவாக உடற்பயிற்சியின் மீது பெரும் காதல் கொண்டவள். தினமும் இரண்டு மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்வதால் அந்த நிகழ்ச்சியை எளிமையாக கடக்க முடிந்தது.

நான் ஜார்ஜியா பல்கலை கழகத்தில் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவள். மாதுரி தீட்சித், ஜுகி சாவ்லா போன்ற பிரபல நடிகைகளுடன் ராம்ப் வாக் சென்று இருக்கிறேன்.

தென் இந்திய அளவில் பல அழகி போட்டிகளுக்கு நடுவராகவும் முன்னணி நிறுவனங்களின் விளம்பர மொடலாகவும் இருந்து இருக்கிறேன். ஜக்குபாய் படத்திற்கு இசையமைத்த ரபீக் இப்படத்திற்கு இசையமைக்கிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் மிக பிரமாண்டமான பொருட்செலவில் மொரீஷியஸ் மற்றும் மலேசியாவில் தயாராகிறது.

முதல் முறையாக தமிழ் படத்தின் படப்பிடிப்பை மொரீஷியஸ் அதிபர் பெர்லன் வையாபுரி தொடங்கி வைத்த முதல் சினிமா இதுதான்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)