Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நல்லாட்சியின் செயற்பாடுகளினால் நல்லிணக்கத்திற்கு ஆபத்து: பிரித்தானிய இந்துக்கள்

In இலங்கை
Updated: 11:02 GMT, Jun 14, 2018 | Published: 11:00 GMT, Jun 14, 2018 |
0 Comments
1036
This post was written by : Risha

இந்து சமூகத்தினரை புண்படுத்தும் வகையிலான செயற்பாட்டிற்கு ஆறுதலளிக்கும் வகையில், இந்து சமய விவகார பிரதியமைச்சராக வெகுவிரைவில் இந்து அமைச்சரொருவர் நியமிக்கப்பட வேண்டும் என பிரித்தானியாவிலிருந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இந்து சமய விவகார பிரதியமைச்சராக இஸ்லாமியர் ஒருவர் நியமிக்கப்பட்டமை உணர்திறனற்ற மற்றும் சிக்கலை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாகும்.

இந்த நியமனமானது, யுத்தத்திற்கு பின்னரான நாட்டின் நல்லிணக்க செயற்பாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால், வெறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான பங்களிப்பை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பௌத்த விவகார அமைச்சராக இஸ்லாமியர் ஒருவரை நியமிப்பதற்கான துணிச்சல் அரசாங்கத்திற்கு உண்டா என்றும் குறித்த ஒன்றியத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)