Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடுக்கடலில் தத்தளித்த அகதிகள் கடற்பயணத்தின்போது அவதி

In ஐரோப்பா
Updated: 11:28 GMT, Jun 14, 2018 | Published: 11:28 GMT, Jun 14, 2018 |
0 Comments
1084
This post was written by : Johnson paiva

ஸ்பெயினுக்கு பயணிக்கும் அகதிகள் கடலில் பலவகையிலான அவதிக்குள்ளாகி வருவதாக இன்று (வியாழக்கிழமை) தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாரிய அலைகள் மற்றும் பலத்த காற்று வீசுகின்றமையினால் கப்பல் மூலமாக கடற்பயணத்தினை மேற்கொள்ளும் அவர்கள் கப்பலின் முன்பகுதிகளில் கயிறுகளைக் கட்டி அதைப் பிடித்தபடி பாதுகாப்பாக நடந்து திரிகின்றனர்.

மேலும் சீரற்ற காலநிலை மற்றும் அலைகளின் சீற்றத்தால் கப்பலிலிருக்கும் அகதிகள் வாந்தி எடுத்தும் காய்ச்சலினால் தாக்கப்பட்டும் பயணத்தினை மேற்கொள்வதாக கப்பல் பணியாளர் தெரிவித்துள்ளார்.

இத்தாலி மற்றும் மால்டா நாடுகளினால் அனுமதி மறுக்கப்பட்ட அகதிகள் இத்தாலிய கப்பல்கள் 2 மற்றும் தொண்டு நிறுவனமொன்றின் கப்பல் ஒன்று மூலமாக நேற்று சிசிலி துறைமுகத்தை அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து சோதனைகளுக்கு பின்னர் ஸ்பெயினின் வலென்சியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை கப்பல்கள் ஸ்பெயின் சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கப்பல் பணியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)