Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஷாருக்கானின் படத்தின் டீசரை வெளியிட்டார் தனுஷ்!

In சினிமா
Updated: 09:06 GMT, Jun 15, 2018 | Published: 11:16 GMT, Jun 14, 2018 |
0 Comments
1198
This post was written by : Vithushagan

ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜீரோ’ படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் .

ஹிந்தி நடிகர் ஷாருக்கான் உடலை வருத்தி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பது வழக்கம். தற்போது ‘ஜீரோ’ என்ற ஹிந்தி படத்தில் குள்ள மனிதராக நடிக்கிறார்.

குள்ளமாக நடிக்கும் ஷாருக்கானின் தோற்றம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த படத்தை தனுஷ் நடித்த ‘அம்பிகாபதி’, மாதவன் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படங்களை இயக்கி பிரபலமான ஆனந்த் எல்.ராய் இயக்கியுள்ளார். இதில் கதாநாயகிகளாக அனுஷ்கா சர்மா, கத்ரினா கைப் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய டீசரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டிருக்கிறார். இந்த டீசரில் சல்மான் கானும், ஷாருக்கானும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

10 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கானும் சல்மான் கானும் ஒரே படத்தில் தோன்றுவது இருவரது ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)