Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காதர் மஸ்தானின் அமைச்சுப் பதவி அதிரடியாக அகற்றப்பட்டது!

In இலங்கை
Updated: 12:00 GMT, Jun 14, 2018 | Published: 12:00 GMT, Jun 14, 2018 |
0 Comments
1462
This post was written by : Puvanes

இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானுக்கு வழங்கிய விடயமானது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியதோடு சமகால அரசியல் தொடர்பாகவும் குழப்பங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி காதர் மஸ்தானிடம் இருந்து நீக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

புதிதாக வழங்கப்பட்ட அமைச்சுகளுக்கான வர்த்தமானி அறிவிப்பில் காதர் மஸ்தானினது பிரதியமைச்சு பொறுப்பில் மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வளிப்பு ஆகியன மாத்திரமே உள்ளடங்கும் எனவும் இந்து விவகார பிரதியமைச்சு அகற்றப்படும் எனவும் சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயமானது ஜனாதிபதி செயலகத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலமாக நாட்டில் ஏற்பட்ட குறித்த அமைச்சு பதவி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எனினும் இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவி அடுத்து யாருக்கு வழங்கப்படும் என்பது இது வரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)