Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நானாக முன்வந்து பதவியை இராஜினாமா செய்தேன்: காதர் மஸ்தான்

In இலங்கை
Updated: 15:20 GMT, Jun 14, 2018 | Published: 14:16 GMT, Jun 14, 2018 |
0 Comments
1111
This post was written by : Johnson paiva

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக   பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இந்து விவகார பிரதி அமைச்சர் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதியுடன் இன்று சந்தித்து பிரதி அமைச்சர் பதவியைப் பெற்றபின் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். நான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சினை ஏற்றுக் கொண்டதையடுத்து இந்து விவகார பிரதி அமைச்சராக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் நோக்கம் கருதி திட்டமிட்டு எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், பொது அமைப்புக்கள் சில கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நானாக முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஏனைய அமைச்சின் பிரதி அமைச்சராக செயற்படுவேன்” எனக் கூறியதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த செவ்வாய்க்கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)