Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய திட்டம் வேடிக்கையானது: சி.சிறீதரன்

In இலங்கை
Updated: 16:32 GMT, Jun 14, 2018 | Published: 16:28 GMT, Jun 14, 2018 |
0 Comments
1096
This post was written by : Johnson paiva

“தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளைக் காப்பாற்ற இயலாத ஜனாதிபதி ஆரம்பிக்கும் புதிய திட்டம் மிகவும் வேடிக்கையானது” எனத் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கூறியுள்ளார்.

எதிர்வரும் 18-ம் திகதி  ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ என்ற புதிய நிகழ்ச்சி திட்டத்தை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “தனது மனையின் இறுதிச்சடங்கிற்காக சிறைச்சாலை பாதுகாப்புக்களுடன் வந்த ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் தந்தையுடன் இணைந்து சிறை வாகனத்தில் ஏறியமை உலகத்தின் கவனத்தையீர்த்தது. இதனையடுத்து ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என தமிழ்தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கேட்டிருந்தது.  அதேபோல் பல மனிதநேய அமைப்புக்களும் கேட்டிருந்தன.

ஆனாலும் அதனைக் கொஞ்சமும் கவனத்தில் கொள்ளாத ஜனாதிபதி, கிளிநொச்சியில் 4 ஆயிரம் பிள்ளைகளை வைத்து ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ நிகழ்ச்சி திட்டத்தினை ஆரம்பித்து வைப்பதற்காக கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் ஜனாதிபதி சிறுவர்களை பாதுகாக்கும் நிகழ்ச்சி திட்டத்தை உள்ளார்ந்தமாக தொடங்குவதாக இருந்தால் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்து அவருடைய பிள்ளைகளுக்கு முதலில் பாதுகாப்பு கொடுக்கவேண்டும். அதனை விடுத்து மக்களை ஏமாற்றும் கைங்கரியத்தை அவர் செய்ய கூடாது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)