Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்கள் உரிமை கோருவது இனவாதமல்ல: சீ.வி

In இலங்கை
Updated: 03:04 GMT, Jun 15, 2018 | Published: 03:04 GMT, Jun 15, 2018 |
0 Comments
1216
This post was written by : Yuganthini

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை திருப்பி தாருங்களென கேட்பது இனவாதமாகாது. அதனை இனவாதமென கூறினால் அது சிங்கள அமைச்சர்களின் அறியாமையென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் இனவாதிபோல் செயற்படுகிறாரென அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்த கருத்து தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“போருக்கு பின்னர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களிடம் உரிமை கேட்பதற்கு வலுவற்ற தன்மை இருந்தது. ஆனாலும் மக்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்பதற்கு ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு தமிழ் மக்கள் உரிமை கேட்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தெற்கிலிருந்து இவ்வாறான கருத்து வந்துகொண்டுதான் இருக்கின்றது.

தமிழ் மக்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளவும் தாருங்களென கேட்பது இனவாதமாகாது. மாறாக இதனை இனவாதமென கூறினால் அது தெற்கிலுள்ள அமைச்சர்களின் விளக்கமற்ற தன்மையே ஆகும்.

மேலும் தமிழ் மக்கள் உரிமை கேட்பது சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடு அல்ல. ஆனால் அந்த உரிமைக்குரல் சிங்கள மக்களுக்கு எதிரான நிலைப்பாடாகவே  காட்டப்படுகிறது” என விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)