Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் பிரசாரத்தில் மோதல்: துருக்கியில் நால்வர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 02:58 GMT, Jun 15, 2018 | Published: 02:58 GMT, Jun 15, 2018 |
0 Comments
1076
This post was written by : Risha

தெற்கு துருக்கியில் தேர்தல் பிரசாரத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள துருக்கி ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, பிரசாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே பதற்றம் அதிகரித்து வன்முறை வெடித்துள்ளது.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராஹிம் யில்டிஸ் முக்கிய குர்திஸ் நகரான சுருக் பகுதியில் வியாபார நிலையங்களில் பிராசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்போது, வியாபார நிலைய உரிமையாளர்கள் சிலர் ஒன்றுகூடி, நாடாளுமன்ற உறுப்பினருடன் உள்ளிட்ட குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து வாக்குவாதம் முற்றி வன்முறையாக உருவெடுத்துள்ளது.

சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினரான இப்ராஹிமின் சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்ததுடன், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)