Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய ஜனாதிபதிக்கு ரஷ்யா அழைப்பு

In உலகம்
Updated: 03:20 GMT, Jun 15, 2018 | Published: 03:20 GMT, Jun 15, 2018 |
0 Comments
1109
This post was written by : Risha

ரஷ்யாவிற்கு விஜயம் செய்யுமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்-னுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரிய அதிகாரி கிம் யொங் நம்-உடன் கிரெம்லினில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போது, வடகொரிய ஜனாதிபதிக்கான ரஷ்யாவிற்கான அழைப்பு குறித்து புட்டின் தெரிவித்துள்ளார்.

நேற்றைய சந்திப்பின்போது, கிம் ஜொங் உன்-னினால் வழங்கப்பட்ட எழுத்து மூலமான குறிப்பை வடகொரிய அதிகாரி புட்டினிடம் கையளித்துள்ளார். இதனை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யுமாறு கிம்முக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையிலான வரலாற்று முக்கியம்வாய்ந்த சந்திப்;பை தொடர்ந்தே புட்டினின் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிங்கப்பூரில் நடைபெற்ற ட்ரம்ப்-கிம் சந்திப்பை புட்டின் வரவேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)